நீரியல் தூக்கி மற்றும் நீரியல் வேகத்தடை ஆகியவை ________ அடிப்படையான அழுத்தத்தினால் செயல்படுகின்றன. - திரவங்களின்
செயல்களை செய்வதற்கு தேவைப்படும் ஒரு புறக்காரனையே _______ எனப்படும்.
-விசை
___________ஆல் இயக்கத்தில் உள்ள பொருளை ஓய்வு நிலைக்கு அல்லது ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்கத்திற்கோ கொண்டு வர முடியும். ஒரு சில பொருட்களின் உருவ மற்றும் வடிவங்களையும் அதனால் மாற்ற முடியும்.-விசை
ஒரு பொருளின் ஓய்வு நிலையை அல்லது சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் இயக்க நிலையை அல்லது இயங்கும் பொருளின் திசையை அல்லது பொருளின் வடிவத்தை மாற்றக்கூடிய புறக்காரணியே _______ எனப்படும். - விசை
எண் மதிப்பும் திசையும் கொண்டுள்ளதால் விசை ஒரு _______ அளவாகும். - வெக்டர்
எந்த ஒரு பொருளின் புற பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை___________எனப்படும். - உந்து விசை
விசை _______ என்ற அலகால் அளக்கப்படுகிறது. - நியூட்டன்
________ என்ற இயற்பியல் அளவை பயன்படுத்தி விசை ஏற்படுத்தும் விளைவை அளக்கலாம். - அழுத்தம்
ஒரு பொருளின் ஒரு சதுர மீட்டர் புறபரப்பின் மீது செங்குத்தாக செயல்படும் விசை அல்லது உந்துவிசை ________என வரையறுக்கப்படுகிறது. - அழுத்தம்
________= உந்த விசை (அ) விசை/பரப்பு ,அதாவது, P=F/A. - அழுத்தம்
அழுத்தத்தின் SI அலகு - பாஸ்கல்
யாரின் நினைவாக அழுத்தத்தின் SI அலகிற்கு பாஸ்கல் என பெயர் எழுதப்பட்டது. - பிரெஞ்சு அறிஞர பிளெய்ஸ் பாஸ்கல்
1 பாஸ்கல் =_____ Nm⁻². ans: 1
ஒரு யானையின் சராசரி எடை 4000 நியூட்டன். அதன் ஒரு பாதத்தின் பரப்பு 0.1m². யானையின் ஒரு கால் மூலம் செலுத்தப்படும் அழுத்தத்தை கணக்கிடுக - 10⁴ Nm^-2 or 10000 நியுட்டன்
ஒரு பொருளின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை ________ வேண்டும் அல்லது உந்துவிசை செயல்படும்________குறைக்க வேண்டும். - அதிகரிக்க,பரப்பை
மிகச்சிறிய பரப்பின் மீது அதிக அழுத்தத்தைச் செலுத்தி அதிக விளைவை ஏற்படுத்துவதற்கான எடுத்துக்காட்டுகள் - கோடாரி, ஆணி ,ஊசி, துப்பாக்கி குண்டுகள், கத்தி
அழுத்தத்தை குறைக்கவும் சாலையுடனான தொடுபடுப்பை அதிகரிக்கவும் கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையிலான __________ கொண்டுள்ளன. - சக்கரங்கள்
தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தை குறைக்கவும் தொடுபரப்பை அதிகரிக்கவும் முதுகில் சுமந்து செல்லும் பைகளில் ________ பொருத்தப்பட்டுள்ளது. - அகலமான பட்டைகள்