Tnpsc General Tamil Online Notes - 001

Tnpsc General Tamil Online Notes - 001

Tnpsc General Tamil Online Notes - 001

TNPSC General Tamil Online Notes - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • உரிச்சொல்
  • இடைச்சொல்
Ans:- D
2.

‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்

  • வினையெச்சம்
  • தெரிநிலை வினையெச்சம்
  • குறிப்பு வினையெச்சம்
  • முற்றெச்சம்
Ans:- C
3.

‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்

  • திருவாசகம்
  • தேவாரம்
  • திருக்குறள்
  • பட்டினப்பாலை
Ans:- B
4.

4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?

  • ரு
Ans:- B
5.

மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா

  • அறி வினா
  • ஐய வினா
  • கொடை வினா
  • ஏவல் வினா
Ans:- C
6.

பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.

  • குயில் கூவும்
  • மயில் அகவும்
  • கோழி கூவும்
  • கிளி பேசும்
Ans:- C
7.

சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்

  • மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய்
  • மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய்
  • மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை
  • மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில்
Ans:- B
8.

தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?

  • பிள்ளையார்ப்பட்டி
  • பெருமாள் பட்டி
  • சுங்குவார்ப்பட்டி
  • செல்லப்பிராட்டி
Ans:- A
9.

ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்

  • உ.வே.சாமிநாதன்
  • ம.பொ.சிவஞானம்
  • திரு.வி.கல்யாண சுந்தரனார்
  • தாரா.பாரதி
Ans:- A
10.

நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும் வலி நீக்கி மருந்து எது?

  • ஆஸ்பிரின்
  • கோப்ராக்சின்
  • குளொராபார்ம்
  • தைராக்சின்
Ans:- B
11.

“சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்

  • வங்கிய சேகர பாண்டியன்
  • கூன் பாண்டியன்
  • சூடாமணி பாண்டியன்
  • பொற்கை பாண்டியன்
Ans:- C
12.

மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்

  • உயிர்
  • கழுத்து
  • வாய்
  • மார்பு
Ans:- D
13.

தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது

  • பெயர்ச்சொல்
  • ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • வினைச்சொல்
  • உரிச்சொல்
Ans:- C
14.

தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்

  • பாரதிதாசன்
  • கம்பதாசன்
  • பூங்குன்றனார்
  • வாணிதாசன்
Ans:- D
15.

அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக

  • மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம்
  • மனத்துயர், மீமிசை, முந்நீர். மேடுபள்ளம்
  • மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
  • முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர்
Ans:- B
16.

‘குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?

  • இன்னிசை அளபெடை
  • செய்யுளிசை அளபெடை
  • சொல்லிசை அளபெடை
  • ஒற்றளபெடை
Ans:- C
17.

கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை

  • இரண்டாம் வேற்றுமை
  • மூன்றாம் வேற்றுமை
  • நான்காம் வேற்றுமை
  • ஆறாம் வேற்றுமை
Ans:- B
18.

திணைகளுக்குரிய ஊர்ப்பெயர்களைப் பொருத்துக.
குறிஞ்சி 1. பாடி, சேரி
முல்லை 2. பேரூர் மூதூர்
மருதம் 3. பட்டினம், பாக்கம்
நெய்தல் 4. சி றுகுடி

  • 4 1 2 3
  • 2 1 4 3
  • 2 4 3 1
  • 3 1 4 2
Ans:- A
19.

பட்டியல் I-ஐ பட்டியல் II-இல் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
கூழை 1. 1,3,4 சீர்களில் வரும்
மேற்கதுவாய் 2. 1,2,3,4 சீர்களில் வரும்
கீழ்க்கதுவாய் 3. 1,2,3 சீர்களில் வரும்
முற்று 4. 1,2,4 சீர்களில் வரும்

  • 3 1 4 2
  • 1 2 3 4
  • 1 3 4 2
  • 3 2 4 1
Ans:- A
20.

DUBBING, DIRECTOR- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?

  • படப்பிடிப்பு, இயக்குநர்
  • நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர்
  • ஒலிச்சேர்க்கை, இயக்குநர்
  • படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர்
Ans:- C
21.

ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்

  • வளையல்
  • ஐந்து
  • திண்ணை
  • ஏதுமில்லை
Ans:- C
22.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?

  • அகவலோசை
  • தூங்கலோசை
  • செப்பலோசை
  • துள்ளலோசை
Ans:- C
23.

“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?

  • முதுமொழிக் காஞ்சி
  • ஏலாதி
  • இனியவை நாற்பது
  • இன்னா நாற்பது
Ans:- A
24.

‘திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

  • அன்புடையோர்
  • அறிவு முதிர்ச்சியுடையோர்
  • ஆர்வமிகு நண்பர்கள்
  • உற்றார்
Ans:- B
25.

“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு ------------------------------ - குறளினை நிறைவு செய்க

  • அன்பு இலவர்க்கு
  • மரம்தளிர்த் தற்று
  • அஃதே துணை
  • இயைந்த தொடர்பு
Ans:- A
26.

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

  • சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
  • சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
Ans:- B
27.

‘செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்

  • நற்றிணை
  • பரிபாடல்
  • குறுந்தொகை
  • பதிற்றுப்பத்து
Ans:- C
28.

சரியான விடையைக் கண்டுபிடி தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்

  • கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
  • முனுசாமி, மங்களம்
  • வெங்கட்ராமன், அம்மணி
  • நீலமேகம்பிள்ளை, சௌந்தரவல்லி அம்மையார்
Ans:- B
29.

‘குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்

  • எதிர்மறைத் தொடர்
  • பிறவினைத் தொடர்
  • செய்வினைத் தொடர்
  • தன்வினைத் தொடர்
Ans:- C
30.

‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?

  • குறிஞ்சி
  • மருதம்
  • நெய்தல்
  • முல்லை
Ans:- A
31.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?

  • இல்பொருள் உவமை அணி
  • உருவக அணி
  • வேற்றுமை அணி
  • பிறிது மொழிதல் அணி
Ans:- A
32.

கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

  • பெண்களுக்கு கிடைக்க வேண்டியவை பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை
  • ஏழைகளுக்கு பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்று தந்தார்.
  • மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்
  • திரைபடம் மக்களை தன்பால் ஈர்த்து கட்டி போடவல்லது.
Ans:- C
33.

கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை

  • வெண்தயிர்
  • சேவடி
  • செந்நெல்
  • சுடரொளி
Ans:- D
34.

‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி

  • இனிய சொல்
  • இனிமையற்ற சொல்
  • இழிவான சொல்
  • விரிவான சொல்
Ans:- A
35.

வழூஉச் சொல்லற்ற தொடர் எது?

  • கதவை நன்றாகத் தாப்பாள் போடவில்லை
  • கதவை நன்றாகத் தால்ப்பாள் போடவில்லை
  • கதவை நன்றாகத் தாழ்ப்பாள் போடவில்லை
  • கதவை நன்றாகத் தாள்ப்பாள் போடவில்லை
Ans:- C
36.

கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்

  • கரிசாலை
  • கையாந்தகரை
  • சிங்கவல்லி
  • தேகராசம்
Ans:- C
37.

அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?

  • நிரல்நிறைப் பொருள்கோள்
  • ஆற்றுநீர் பொருள்கோள்
  • மொழிமாற்றுப் பொருள்கோள்
  • விற்பூட்டுப் பொருள்கோள்
Ans:- A
38.

'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்

  • துன்பம்
  • பகை
  • நட்பு
  • வலிமை
Ans:- B
39.

'பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?

  • கிளி, மயில்
  • நாரை, அன்னம்
  • புறா, பருந்து
  • கடற்காகம்
Ans:- C
40.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.

  • இணை மோனை
  • பொழிப்பு மோனை
  • ஒரூஉ மோனை
  • கூழை மோனை
Ans:- B
41.

திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை

  • அறநூற்று ஐம்பத்தெட்டு
  • அறநூற்று எண்பத்தைந்து
  • நானூற்று ஐம்பத்தெட்டு
  • அறுநூற்றுப் பத்து
Ans:- A
42.

சொல்லிசை அளபெடை தேர்க

  • உண்பதூஉம்
  • பெறாஅவிடின்
  • தழீஇ
  • அண்ணன்
Ans:- C
43.

பிரித்தெழுதுக வெவ்விருப்பாணி

  • வெம் + இரும்பு + ஆணி
  • வெம் + இருப்பு + ஆணி
  • வெம்மை + இரும்பு + ஆணி
  • வெம்மை + இருப்பு + ஆணி
Ans:- C
44.

பொருந்தா இணையைக் கண்டறிக

  • பையுள் - இன்பம்
  • பனவன் - அந்தணன்
  • விபுதர் - புலவர்
  • அல்கு - இரவு
Ans:- A
45.

சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது

  • மாம்பழம்
  • நாவல் பழம்
  • கொய்யாப்பழம்
  • பலாப்பழம்
Ans:- B
46.

“சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்

  • புகழேந்திப் புலவர்
  • உமறுப் புலவர்
  • காளமேகப் புலவர்
  • அழகிய சொக்கநாதப் புலவர்
Ans:- A
47.

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?

  • உ.வே.சா
  • பாவாணர்
  • ஞானப்பிரகாசன்
  • ஞானக் கூத்தன்
Ans:- C
48.

கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.

  • கூவும்
  • கத்தும்
  • குழறும்
  • அகவும்
Ans:- C
49.

Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க

  • சிற்றுண்டி
  • சிற்றுணா
  • சிற்றுணவு
  • சீரான உணவு
Ans:- B
50.

மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா
Ans:- B
51.

“அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட, தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது” - இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?

  • பாரதியார்
  • சுந்தரம் பிள்ளை
  • கவிமணி
  • பாரதிதாசன்
Ans:- B
52.

கோடிட்ட இடங்களை நிரப்புக. சிங்கவல்லி என்று வழங்கப்படும் மூலிகை ---------------------------

  • துளசி
  • தூதுவளை
  • அகத்திக்கீரை
  • கீழாநெல்லி
Ans:- B
53.

‘மீதூண் விரும்பேல்’ – என்றவர்

  • பாரதியார்
  • அதிவீரராம பாண்டியர்
  • பாரதிதாசன்
  • ஒளவையார்
Ans:- D
54.

பொருத்துக.
WRIT 1. மணிக்கட்டு
WRIST 2. எழுது
WRITE 3. உரிமை
RIGHT 4. சட்ட ஆவணம்

  • 4 1 2 3
  • 4 2 1 3
  • 2 1 3 4
  • 2 3 4 1
Ans:- A
55.

‘தமிழ் நாடகத் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?

  • பம்மல் சம்பந்தனார்
  • சங்கரதாசு சுவாமிகள்
  • பரிதிமாற் கலைஞர்
  • தி.க.சண்முகனார்
Ans:- A
56.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக.
வினைத்தொகை 1. நாலிரண்டு
உவமைத்தொகை 2. செய்தொழில்
உம்மைத்தொகை 3. பவளவாய் பேசினாhள்
அன்மொழித்தொகை 4. மதிமுகம்

  • 2 4 1 3
  • 2 3 1 4
  • 4 2 3 1
  • 4 3 1 2
Ans:- A
57.

கீழ்க்காணும் உயிரளபெடைகளுள் பொருந்தா உயிரளபெடைத் தொடரைச் சுட்டுக.

  • கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
  • உழாஅர் உழவர்
  • படாஅ தவர்
  • தூஉ மழை
Ans:- A
58.

கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்

  • திருவள்ளுவரைப் படித்துப் பார்
  • கம்பனைப் புரட்டிப்பார்
  • தொல்காப்பியனை தொட்டு உணர்
  • நான் சமையல் கற்றேன்
Ans:- D
59.

மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

  • ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது.
  • ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது.
  • ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது.
  • ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது.
Ans:- B
60.

பின்வருவனவற்றுள் ‘வினைத்தொகை’ என்னும் இலக்ணத்திற்குச் சான்றாக வராத சொல்லைத் தேர்க

  • கொலைப்புலி
  • பொங்கு கடல்
  • பொழிதருமணி
  • செய்கொல்லன்
Ans:- A
61.

செய்யுள் அடிகளை முன்பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது

  • கொண்டு கூட்டுப் பொருள்கோள்
  • அடிமறி மாற்றுப் பொருள்கோள்
  • அளைமறி பாப்புப் பொருள்கோள்
  • மொழி மாற்றுப் பொருள்கோள்
Ans:- B
62.

பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

  • கண்ணன் அம்மாவிடம் உத்தரவு பெற்று திரைப்படத்திற்குச் சென்றான்
  • நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது.
  • கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்
  • மாதவி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.
Ans:- C
63.

வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு பிறிதொரு பொருள் புலப்படுமாறு அமைப்பது

  • உள்ளுறை
  • உருவகம்
  • உவமை
  • வெளிப்படை
Ans:- A
64.

ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் காண்க.

  • தமிழர்கள் அரபு நாட்டுடனும்இ யவன நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்
  • சித்த மருத்துவத்தைப் பதினெண் சித்தர்கள் வளர்த்தார்
  • தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தன.
  • இயங்குருப் படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
Ans:- A
65.

“தண்டமிழ் ஆசான்” என்று இளங்கோவடிகளால் பாராட்டப்பெற்றவர்

  • குமரகுருபரர்
  • சீத்தலைச் சாத்தனார்
  • சேக்கிழார்
  • பாரதிதாசன்
Ans:- B
66.

சேக்கிழாரின் இயற்பெயர்

  • மீனாட்சி சுந்தரனார்
  • ஆனந்தரங்கம் பிள்ளை
  • அருண் மொழித்தேவர்
  • வாகீசர்
Ans:- C
67.

குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை

  • மூன்றடிச் சிறுமை ஆறடிப் பெருமை
  • ஒன்பதடிச் சிறுமை பன்னிரண்டடிப் பெருமை
  • நான்கடிச் சிறுமை எட்டடிப் பெருமை
  • இரண்டடி சிறுமை பாடுபவன் மனக்கருத்து
Ans:- C
68.

“சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது : சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது” என்னும் உரைவீச்சுக்குச் சொந்தக்காரர்

  • மு.மேத்தா
  • சாலை.இளந்திரையன்
  • அப்துல் ரகுமான்
  • ந.பிச்சமூர்த்தி
Ans:- B
69.

கீழ்க்காணும் சொற்களுள் ‘சூரியன்| எனும் பொருள் குறிக்காத சொல்லைக் கண்டறிக.

  • ஞாயிறு
  • பகலவன்
  • பிரமன்
  • ஆதவன்
Ans:- C
70.

பிரித்தெழுதுக நன்கணியர்

  • நன்கு +அணியர்
  • நன் +அணியர்
  • நான்கு + அணியர்
  • நன்கு +கணியர்
Ans:- A
71.

பொருத்துக :
வைதருப்பம் 1. மதுரகவி
கௌடம் 2. ஆசுகவி
பாஞ்சாலம் 3. வித்தாரகவி
மாகதம் 4. சித்திரகவி

  • 2 3 1 4
  • 4 3 1 2
  • 2 1 4 3
  • 3 4 2 1
Ans:- C
72.

‘விளம்பி’ என்பது -------------- பெயர்

  • இயற்பெயர்
  • புனைபெயர்
  • ஊர்ப்பெயர்
  • இறைவனின் பெயர்
Ans:- C
73.

‘அற்புதப்பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்’ - பாடியவர் யார்?

  • அப்பர்
  • சம்பந்தர்
  • சுந்தரர்
  • திருமூலர்
Ans:- C
74.

சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ---------------

  • எட்டுத்தொகை
  • பத்துப்பாட்டு
  • பதினெண் கீழ்க்கணக்கு
  • பதினெண் மேல்கணக்கு
Ans:- C
75.

பொருந்தாத இணையைக் கண்டறிக

  • சிறுபஞ்சமூலம் - காரியாசான்
  • ஞானரதம் - பாரதியார்
  • எழுத்து – சி.சு.செல்லப்பா
  • குயில்பாட்டு – கண்ணதாசன்
Ans:- D
76.

“பண்ணொடு தமிழொப்பாய்” என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

  • திருவாசகம்
  • திருக்குறள்
  • தேவாரம்
  • திருத்தொண்டர் புராணம்
Ans:- C
77.

“கடம்” என்ற சொல்லின் பொருள்

  • முகம்
  • கைகள்
  • உடம்பு
  • இடுப்பு
Ans:- C
78.

அகத்துறுப்பு என்பது

  • பல்
  • மனத்தின் உறுப்பு அன்பு
  • இதயம்
  • வயிறு
Ans:- B
79.

“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்” – என்று கூறிய அறிஞர்

  • தேவநேயப் பாவாணர்
  • பாரதிதாசன்
  • கால்டுவெல்
  • ஜி.யு.போப்
Ans:- C
80.

தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

  • சுகலகலா வல்லி மாலை
  • பூங்கொடி
  • மணிக்கொடி
  • உரிமை வேட்கை
Ans:- B
81.

“நற்கலை” என்று அழைக்கப்படும் கலை

  • கட்டடக் கலை
  • சிற்பக் கலை
  • ஓவியக் கலை
  • அழகுக் கலை
Ans:- D
82.

“கால்டுவெல்” தமிழகத்தில் வாழ்ந்த இடம்

  • புளியங்குடி
  • சிறுகூடல் பட்டி
  • மாங்குளம்
  • இடையன்குடி
Ans:- D
83.

பொருத்துக :
திணை பொழுது
குறிஞ்சி 1. எற்பாடு
முல்லை 2. நண்பகல்
மருதம் 3. மாலை
நெய்தல் 4. யாமம்
பாலை 5. வைகறை

  • 4 3 5 1 2
  • 2 1 4 5 3
  • 5 4 1 2 3
  • 3 1 2 4 5
Ans:- A
84.

‘எற்பாடு’ – என்னும் சொல்லில் ‘பாடு’ என்பதன் பொருள்

  • தயார் செய்தல்
  • பாட்டுப்பாடுதல்
  • மறையும் நேரம்
  • துன்பப்படுதல்
Ans:- C
85.

“வயிரமுடைய நெஞ்சு வேணும்” எனக் கூறிய கவிஞர்

  • பாரதிதாசன்
  • கவிமணி
  • பாரதியார்
  • அழ.வள்ளியப்பா
Ans:- C
86.

“ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன்றேனையது” என்ற பாடல் இடம் பெறும் நூல்

  • மாறனலங்காரம்
  • காரிகை
  • தண்டியலங்காரம்
  • நன்னூல்
Ans:- C
87.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ எனக் கூறியவர்

  • பாரதியார்
  • திருவள்ளுவர்
  • ஒளவையார்
  • திருமூலர்
Ans:- B
88.

தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி எனும் நூலை வெளியிட்ட கவிஞர்

  • கண்ணதாசன்
  • வாணிதாசன்
  • வண்ணதாசன்
  • பாரதியார்
Ans:- B
89.

கீழ்வருவனவற்றுள் மரபுச் சொற்கள் இல்லாத தொடர் எது?
I. சிங்கம் முழங்கும்
II.பூனை கீச்சிடும்
III.புறா குனுரும்
IV.வண்டு முரலும்

  • I மற்றும் II சரி
  • III மற்றும் IV சரி
  • I, III மற்றும் IV சரி
  • II, III மற்றும் IV சரி
Ans:- C
90.

கலிங்கத்துப்பரணி பாடப்படும் பாவகை

  • சிந்துவிருத்தம்
  • கட்டளை கலித்துறை
  • ஆசிரியவிருத்தம்
  • கலித்தாழிசை
Ans:- D
91.

கணவனைத் தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்

  • காக்கைப்பாடினியார்
  • காரைக்காலம்மையார்
  • வெள்ளி வீதியார்
  • நப்பசலையார்
Ans:- C
92.

உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர் ஒக் கும்மே -இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  • புறநானூறு
  • அகநானூறு
  • ஐங்குறுநூறு
  • பரிபாடல்
Ans:- A
93.

“…. சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” – என்ற பாடலடியைப் பாடியவர்

  • கபிலர்
  • கம்பர்
  • ஒளவையார்
  • பரணர்
Ans:- A
94.

“ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு” என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் ‘பா’ – எது?

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா
Ans:- B
95.

ஒருமை பன்மை பிழைகளை நீக்குக. பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்

  • பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
  • பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
  • பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
  • பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்
Ans:- D
96.

நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?

  • கூத்துக்கலை
  • நாட்டியக்கலை
  • பரதக் கலை
  • சிற்பக் கலை
Ans:- A
97.

‘இராசதண்டனை’ - இந்த நாடகத்தை யார் படைத்தார்?

  • வண்ணதாசன்
  • பாரதிதாசன்
  • கண்ணதாசன்
  • வாணிதாசன்
Ans:- C
98.

‘டைரியம்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் :

  • ஆண்டுக் குறிப்பு
  • மாதக்குறிப்பு
  • நாட் குறிப்பு
  • வாரக்குறிப்பு
Ans:- C
99.

வேர்ச் சொல்லிலிருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கல் கொடு :

  • கொடுத்தல்
  • கொடுத்த
  • கொடுத்து
  • கொடுத்தவன்
Ans:- D
100.

குற்றியலுகரத்திற்கான மாத்திரை அளவு பின்வருவனவற்றுள் எது?

  • ஓன்று
  • இரண்டு
  • ஒன்றரை
  • அரை
Ans:- D

Post a Comment